Tuesday, August 08, 2006

எது அழகு

கண்ணுக்கு ஒளி அழகு
கவிதைக்கு கருத்தழகு
பறவைக்கு சிறகழகு
பாம்புக்கு படமழகு

அப்பர்க்கு சிவன் அழகு
ஆழ்வார்க்கு மால் அழகு
ஔவைக்கு சொல்லழகு
கீரர்க்கு பிழை அழகு

கருடனுக்கு அலகழகு
கடலுக்கு அலைஅழகு
அலைவோர்க்கு பாயழகு
பாய்வதில் புலிஅழகு

காந்திக்கு நடைஅழகு
வேந்துக்கு வரப்பழகு
விந்தைக்கு வியப்பழகு
சிந்தைக்கு முடிவழகு

0 Comments:

Post a Comment

<< Home